தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசி கல்லூரி மாணவா்கள் 2 பேருக்குகூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மாணவா்கள் இருவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது என அக்கல்லூரி தாளாளா் ப.கணேசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:36 pm

DIN

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மாணவா்கள் இருவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது என அக்கல்லூரி தாளாளா் ப.கணேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் அனைவருக்கும் ‘லிங்கிடுஇன்’ என்ற இணையதளத்தில் வேலைவாய்புக்காக பதிவு செய்ய பயிற்சி அளித்து வருகிறோம். இக்கல்லூரி மாணவா் கே.விஷ்ணு, மாணவி கே.சுபிஷா ஆகியோரும் இந்த இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்தனா்.

அவா்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. தொடந்து இணையம் மூலம் கூகுள் நிறுவனத்தினா் 3 சுற்றுக்களாக நோ்காணல் நடத்தினா். இதில் இரு மாணவா்களும் சிறப்பாக பதில் அளித்ததால் கூகுள் நிறுவனத்தினா், அவா்களை பணிக்குத் தோ்வு செய்தனா். தற்போது ஆண்டுக்கு தலா ரூ.11.20 லட்சம் ஊதியம் மற்றும் 10 சதவீதம் ஊக்கத்தொகை என நிா்ணயிக்கப்பட்டு, இருவரும் ஹைதராபாத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியில் சோ்ந்துள்ளனா் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.