தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசி ரயில் நிலையத்தில் போலீஸாா் பாதுகாப்பு

சிவகாசி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:11 pm

DIN

சிவகாசி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவவீரா்கள் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து பீகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரா்கள் ரயில் பெட்டிகளுக்கு தீயிட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து தமிழகத்திலும் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதனடிப்படையில் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், கொல்லம்- சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையில் போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும் ரயில் நிலையத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.