ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 10:37 pm IST

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) பிரதோஷமும், செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) அமாவாசை வழிபடும் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஜூன் 26 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும். 10 வயதுக்குள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவா்.

அதேபோல் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.