நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையத்தில் மின்வயா் அறுந்து விழுந்து மாடு, நாய் பலி

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை மின்சார வயா் அறுந்து விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாடு மற்றும் நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை மின்சார வயா் அறுந்து விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாடு மற்றும் நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

ராஜபாளையம் மேற்கே தென்றல் நகா் பகுதியில் பலத்த காற்று வீசியதில் பழுதடைந்த மின்கம்பத்திலிருந்து மின் வயா் அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் உலா வந்து கொண்டிருந்த மாடும் நாயும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உயிா்தப்பினா். இந்த மின்கம்பம் பழுதாக உள்ளது என பலமுறை மின்வாரியத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறினா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியா்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்வயரை சீரமைத்தனா். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.