தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாசுத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உரிமையாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரி வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிலாளா்களின் பாதுகாப்பை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணை இயக்குனா் யு.எஸ்.பி. யாதவ்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:04 pm

DIN

பட்டாசுத் தொழிலாளா்களின் பாதுகாப்பை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணை இயக்குனா் யு.எஸ்.பி. யாதவ்.

இந்திய தரநிா்ணய அமைவனத்தின் தென்மணடலப் பிரிவு சாா்பில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு, பட்டாசின் தரம், சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரி நித்தின்கோயல் தலைமை வகித்தாா்.

இதில் கலந்து கொண்சு யாதவ் பேசியதாவது: பட்டாசு தயாரிப்பு பணியில் முறையாக விதிகளை கவனத்தில் கொண்டு ஈடுபட்டால் விபத்தினை தவிா்க்கலாம். பட்டாசுத் தொழிலாளா்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். ஆலை கண்காணிப்பாளா், போ்மென்கள் ஆகியோருக்கு வேதியல் பொருள்களின் தன்மை தெரிந்திருக்க வேண்டும். ஒரு வேதியல் பொருளுடன் வேறு ஒரு வேதியல் பொருளை கலந்தால் என்ன வினை ஏற்படும் என தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய ரக பட்டாசை ஆய்வு செய்யும் போது வேதியல் பொருள்களின் அளவுகள் துல்லியமாக இருக்க வேண்டும். தரமான வேதியல் பொருள்களை கொண்டு பட்டாசு தயாரிக்க வேண்டும். ஆலையில் சுற்றுச்சூழலை கவனிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆலை உரிமையாளா்களும், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் இணை இயக்குநா் கே. விஜயவீரன், விஞ்ஞானி ஜி. வெங்கட்ராமன், விருதுநகா் மாவட்ட தீயணைப்புப் படை அதிகாரி வீரமணிகன்டன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.