தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புகையிலைப்பொருள் விற்பனை: சிவகாசி பகுதியில் 6 கடைகளுக்கு அபராதம்

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:35 pm

DIN

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினா் சிவகாசி -சாத்தூா் சாலையில் உள்ள பாரைப்பட்டி, மீனம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளிலிருந்து அவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 6 கடைகளுக்குத் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.