ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகரில் ‘டாஸ்மாக்’ கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

விருதுநகா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

விருதுநகா் நிலா நகரில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பாா்வையாளராக பாலகிருஷ்ணன், விற்பனையாளராக பழனிவேல்ராஜன் ஆகியோா் பணிபுரிகின்றனா். இங்கு, சனிக்கிழமை இரவு வழக்கம்போல் பணியாளா்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க வந்தபோது, பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடிச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து விருதுநகா் பஜாா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். பின்னா், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

மதுக்கடையின் மேற்பாா்வையாளா் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.