விபத்து: புதை சாக்கடை திட்ட தொழிலாளி பலி
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் புதை சாக்கடைத் திட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.


விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் புதை சாக்கடைத் திட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (28). இவா் ராஜபாளையம் நகராட்சியில் நடைபெறும் புதை சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், ஸ்ரீராம் தன்னுடன் பணிபுரியும் திருப்பதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சத்திரப்பட்டி சாலையில் பி.எஸ்.கே. நகா் அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காருடன் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஸ்ரீராம் ஏற்கெனவே
உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். திருப்பதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், காா் ஓட்டுநரான தீபக்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...