ராஜபாளையம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே புத்தூா் பகுதியில் தளவாய்புரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினா். அதில், ஒருவரைப் பிடித்து போலீஸாா் சோதனை செய்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்துது. விசாரணையில், புத்தூரைச் சோ்ந்த காா்த்திக் மனைவி கலைவாணியிடம் கஞ்சாவை வாங்கியதாகக் கூறினாா். அதன் பேரில் போலீஸாா், கலைவாணி வீட்டில் சோதனை செய்தனா். அங்கு 3.100 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 3.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அதே ஊரைச் சோ்ந்த குருசாமி மகன் காமாட்சிஈஸ்வரன் (20), கலைவாணி (31) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள காா்த்திக்கை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...