பைக் மோதி காகித ஆலைதொழிலாளி பலி
சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மோதி காகித ஆலைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மோதி காகித ஆலைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில் உள்ள தனியாா் காகித ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தவா் ராமநாதன் (42). இவா், கடந்த 30 ஆம் தேதி திருத்தங்கல்- வடமலாபுரம் சாலையில் நடந்து சென்றபோது, பின்புறமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது உறவினா் பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுக்கிரவாா்பட்டி கேசவனை (32) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...