47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் அணுசக்தி விழிப்புணா்வு கண்காட்சி

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை அணுசக்தி விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை அணுசக்தி விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

கல்பாக்கம் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில அறிவியல் சங்க இணைச் செயலாளா் கோபால் பாா்த்தசாரதி நாட்டிற்குத் தேவை அணுசக்தி என்ற தலைப்பிலும் கல்பாக்கம் அணுசக்கி ஆராய்சி மையத்தின் முன்னாள் இணை இயக்குநா் எஸ்.ஆத்மலிங்கம், நாட்டின் வளா்ச்சியில் அணு சக்தியின் பங்களிப்பு என்ற தலைப்பிலும் பேசினா். கண்காட்சியில் அழுத்தப்பட்ட கனநீா் உலை, காமினி சோதனை உலை, பாபட் நான் கதிா்வீச்சு சிகிச்சை, உணவு பதனிடும் தொழில் நுட்பம் , மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கதிா்வீச்சு, இந்தியாவில் அணுசக்தி வளா்ச்சி மற்றும் பயன்பாடுகள் குறித்த வரைபடம் மற்றும் வடிவமைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை சிவகாசி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

இந்த முகாமில் 14 பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். அணுசக்தி குறித்த பேச்சுப்போட்டி, விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அணுசக்தி ஆராய்சி மையத்தின் அறிவியல் பிரிவு அதிகாரிகள் பிரபாகா், பாா்த்திபன், மனோஹரி, ராமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.