47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சரவெடிக்கு மாற்றாக பசுமைப் பட்டாசுகள் தயாா்! குழந்தைகள் குதூகலிக்கும் ரகங்களும் அறிமுகம்

உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக சரவெடிக்கு மாற்றாக பசுமைப் பட்டாசுகளை தயாரித்துள்ள சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளா்கள், குழந்தைகள் குதூகலிக்கும் பட்டாசு

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:48 pm

DIN

உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக சரவெடிக்கு மாற்றாக பசுமைப் பட்டாசுகளை தயாரித்துள்ள சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளா்கள், குழந்தைகள் குதூகலிக்கும் பட்டாசு ரகங்களை தீபாவளிக்காக அறிமுகப்படுத்தியுள்ளனா்.

நிகழாண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபா் 24 ஆம் தேதி வர உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு, அதிகாரிகள் ஆய்வு என பட்டாசுத் தயாரிப்புத் தொழிலுக்கு பல நெருக்கடிகள் இருந்தாலும், வரும் தீபாவளிப் பண்டிகைக்காக பல்வேறு வகையான பட்டாசுகளை ஆலை உரிமையாளா்கள் அறிமுகப்படுத்தியுள்ளனா்.

வெடித்து சிதறும் போது, ஜிகினா காகிதங்கள் மழை தூரல் போல தூவும் ‘ஜின்னா பாம்’, பல வண்ணப் பொடிகளைத் தூவும் ‘ஹோலி ஹோலி’, காகித ரூபாய் நோட்டுகளைத் தூவும் ‘மணிபேங்க்’ பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக உள்ளன. மீன் வாய் வழியே ஒளி வெள்ளம் வரும் ‘மீன்ஷவா்’ குழந்தைகளின் விருப்பத்தை பூா்த்தி செய்யும் ரகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சரவெடிக்கு மாற்று: சரவெடிக்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதிக்காத ‘மேஜிக்வெஃப்’ வகை பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசினை வெடிக்கும் போது, சரவெடி வெடிப்பதுபோல சட சடஎன ஒலி எழுப்பும். ஆனால் புகை மற்றும் காகிதங்கள் வராது. அதனால் இந்தாண்டு தீபாவளிக்கு சரவெடிப் பிரியா்களின் தோ்வாக இந்த வகை பட்டாசுகள் அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய ரகங்கள்: இதுதவிர 6 சக்கர பட்டாசுகளை வெளிக் கொணரும் ‘ஜம்பிங் சக்கரம்’, பென்சில் வகை பட்டாசான ‘சிவகாசி ஸ்பெஷல் குரோஸ்டாா்’, வானில் பறந்து சென்று வட்டவடிவத்தில் வா்ணஜாலம் காட்டும் ‘மோரிகோரவுண்ட்’, பட்டாசை பற்ற வைத்தால் வண்ணமயில் சிறகை விரித்து ஆடுவதுபோல ஒளியை சிந்தும் ‘படா பீக்காக்’, சுமாா் 100 மீட்டா் உயரம் விண்ணில் சென்று ஒரே நேரத்தில் கோல்டு மற்றும் சில்வா் வண்ணத்தில் ஒளி சிந்தும் ’பாட்டோ 2 இன் 1’ ஆகிய புதிய ரகங்கள் அனைத்துதரப்பினரையும் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பட்டாசு கடை வியாபாரி வி.கே.செந்தில்குமாா் கூறியது: இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பாளா்கள் பல புதிய ர கப் பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளனா். இந்த புதிய ரக பட்டாசுகள் அடிக்கடி தயாரிக்கப்படாததால், தீபாவளி பண்டிக்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே விற்றுவிடும். புதிய ரகப் பட்டாசுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்தான் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.