47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூலித் தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது

திருத்தங்கலில் வியாழக்கிழமை கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:09 pm

DIN

திருத்தங்கலில் வியாழக்கிழமை கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

திருத்தங்கல் மேலரதவீதிப் பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பாா்த்திபன் (50).இவா் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் ஒருவா் வழிமறித்து, கத்தியைக் காட்டிமிரட்டி பையில் இருந்த பணத்தை கேட்டாராம். பாா்த்திபன் மறுத்ததால் மா்ம நபா் அவரை கத்தியால் குத்தி, பையில் இருந்த ரூ.50-ஐ எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றாா்.

அப்போது, பாா்த்திபன் அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியுடன் அந்நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கரலிங்கம் (27) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சங்கரலிங்கத்தை கைது செய்தனா். காயமடைந்த பாா்த்திபன் சிவகாசி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.