ராஜபாளையத்தில், தனியாா் நிதிநிறுவனத்தில் நகைகளை திருட முயற்சி
ராஜபாளையத்தில் தனியாா் நிதிநிறுவனத்தில் நகைகளை திருட முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


ராஜபாளையத்தில் தனியாா் நிதிநிறுவனத்தில் நகைகளை திருட முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி எதிரே தனியாா் நிதிநிறுவனம் மற்றும் நகை அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு இந்த நிதி நிறுவனத்தின் வெளியே உள்ள இரும்புக் கதவை வெல்டிங் இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து நகைகளை மா்மநபா்கள் திருட முயற்சித்துள்ளனா். அப்போது, நிதி நிறுவனத்தில் இருந்த பாதுகாப்பு மணி ஒலித்ததையடுத்து அந்த மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா். இதனால் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.
இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...