காரை சோதனை செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில் வேலூர் மேயர் சுஜாதாவின் ஓட்டுனர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுளள்து. விரைவில் மேயர் மீதும் வழக்குப்பதிய வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் தேர்தல் விதி மீறி வேலூர் திமுக மேயர் சுஜாதா விளையாட்டு உபகரணங்களை கொடுக்க முயற்சித்ததாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
அந்த வேளையில், தேர்தல் பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட முயற்சித்த போது காரில் இருந்தவர் தன்னை மேயர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேயரின் கார் ஓட்டுநர் மீது அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதி மீறி பரிசு பொருள்கள் விநியோகிப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று மேயர் பயணித்த காரை சத்துவாச்சாரி காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
கார் ஓட்டுனர் மீது முதற்கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் மேயர் சுஜாதா மீதும் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Summary
Vellore Mayor Sujatha's car has been seized for violating election rules.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










