வரும் பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக மாநகராட்சி மேயர் பதவி வகிக்கும் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார்.
அதன்படி, மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களில் திருப்பூர் மேயர் தினேஷ் திருப்பூர் (தெற்கு) தொகுதியிலும் ஒசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா ஒசூர் தொகுதியிலும் தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் தஞ்சாவூர் தொகுதியிலும் நாகர்கோவில் மேயர் மகேஷ் கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் மாநகராட்சி திமுக பொறுப்பாளரும் எஸ்.ஏ. சத்யா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமாவார். கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்தவரான சண். ராமநாதனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளரான ந. தினேஷ்குமார் அத்தொகுதியில் செல்வாக்குமிக்கவராகத் திகழ்கிறார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் சிறுபான்மையினர் வாக்குகளைக் கணிசமாகப் பெறுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், திமுகவுக்கு எதிராக மேற்கண்ட தொகுதிகளில், திருப்பூர் (தெற்கு) மற்றும் தஞ்சாவூரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசூரில் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரம் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Summary
DMK candidates list comprises of Corporation Mayors
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

தேர்தல் விதி மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

