ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

மாருதி சுஸூகி நிறுவனத்தில் சிறிய ரக எஸ்யுவி கார் அறிமுகமாகவுள்ளது குறித்து...

maruti suzuki

கோப்புப் படம்

Published On :21 ஏப்ரல் 2026, 4:29 pm IST

டாடா, ஹுண்டாய் நிறுவனங்களுக்குப் போட்டியாக சிறிய ரக எஸ்யுவி காரை மாருதி சுஸூகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

டாடா பஞ்ச, ஹுண்டாய் எக்ஸ்டர் போன்ற சிறிய ரக எஸ்யுவி கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனமும் சிறிய ரக எஸ்யுவி காரை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த கார் ஒய் 43 (Y43) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. முழுமையான வடிவம் மற்றும் தயாரிப்புக்குப் பிறகு மாற்றுப் பெயரில் சிறிய ரக எஸ்யுவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

நடப்பு 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ இந்த மைக்ரோ எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.

இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரில் Z12E 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

80 ஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்கக் கூடிய என்ஜின் பொருத்தப்படலாம்.

பெட்ரோலுடன் சேர்த்து சிஎன்ஜி வகையும் வழங்கப்படுகிறது. அவ்வாறு சிஎன்ஜி வழங்கப்பட்டால், ஒரு லிட்டருக்கு 30 - 35 கி.மீ. மைலேஜ் வழங்கும் காரான இது இருக்கும்.

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படவுள்ளன.

3.8 மீ நீளமும், 1.6 மீ உயரமும், 1.7 மீ அகலமும் உடையது.

இதன் ஆரம்ப விலை ரூ. 5.25 லட்சம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.