உலகின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி, இயன்றவரை வீட்டிலிருந்தே வேலை, வெளிநாடுகளுக்கான பயணங்கள் தவிர்ப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை அதன் ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் போர்ச்சூழல் மற்றும் உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் இயங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
ஆகையால், எரிபொருள் சேமிக்கும் நோக்கில் வீட்டிலிருந்தே வேலை செய்தல், பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துதல், சந்திப்புகளை இணைய வழியில் மேற்கொள்ளுதல் மற்றும் அந்நியச் செலவாணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சில நாள்களுக்குத் தங்கம், வெள்ளியை வாங்காமல் இருத்தல் போன்ற திட்டங்களைக் கடைபிடிக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மாருதி சுசுகி நிறுவனம் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது:
1. வீட்டிலிருந்தே வேலை: எங்கெல்லாம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது சாத்தியமோ அங்கு இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் நாம் எரிபொருளைச் சேமிக்கலாம்.
2. பயணம் தவிர்ப்பு: வணிகத் தேவைகளுக்கு அத்தியாவசியம் என்றால் மட்டுமே வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். மற்றபடி, சந்திப்புகளை இணையவழியில் நடத்த வேண்டும்.
3. பொதுப் போக்குவரத்து: ஊழியர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல் நல்லது.
4. ஆற்றல் சேமிப்பு: அலுவலகங்கள் மற்றும் வீடுகள் முழுவதிலும் ஏசி, மின்விசிறிகள், மின்விளக்குகள் போன்றவற்றை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
#MarutiSuzuki has placed immense importance in the Hon'ble Prime Minister's clarion call for austerity as well as the need to mitigate the long-term impact of the West Asia war. The Company strongly feels whether it is during a crisis or business as usual, management should⦠pic.twitter.com/qEXB2QzxqT
— Maruti Suzuki (@Maruti_Corp) May 26, 2026
Summary
Maruti Suzuki, the world's leading car manufacturer, issued key directives to its employees on Tuesday, such as working from home whenever possible and avoiding international travel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











