புதுதில்லி: வாகன சந்தையில் முன்னணியில் உள்ள மாருதி சுசுகி இந்தியா, மார்ச் 2026ல், தனது மொத்த வாகன விற்பனை 16.72 சதவீதம் உயர்ந்து 2,25,251 வாகனங்களாக இருப்பதாக அறிவித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த விற்பனையானது 1,92,984 வாகனங்களாக இருந்தது.
கடந்த மாதம் மொத்த உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை 1,66,219 வாகனங்களாக பதிவானது. இதுவே மார்ச் 2025ல் விற்பனையான 1,50,743 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது 10.27% வளர்ச்சியாகும்.
பிரிவுகளின் அடிப்படையில், ஆல்ட்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனை 11,741 வாகனங்களாக இருந்தது. இதுவே ஓராண்டுக்கு முன்பு விற்பனையான 11,655 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது சற்று அதிகமாகும்.
பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட காம்பாக்ட் ரக கார்களின் விற்பனை, மார்ச் 2025ல் 66,906 வாகனங்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் இது 71,789 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்.எல்-6 உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 61,097 வாகனங்களாக இருந்த நிலையில், தற்போது இது 71,356 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
இலகு-ரக வர்த்தக வாகனத்தின் விற்பனை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,391 வாகனங்களாக இருந்த நிலையில், தற்போது இது 3,209 வாகனங்களாக இருப்பதாக மாருதி தெரிவித்தது.
2025-26 நிதியாண்டில், மொத்தம் 24,22,713 வாகனங்கள் விற்பனையானது. கடந்த நிதியாண்டில் இது 22,34,266 வாகனங்களாக இருந்ததாக மாருதி தெரிவித்துள்ளது.
Maruti Suzuki India reported a 16.72 per cent rise in total sales at 2,25,251 units in March 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 25% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


