அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

செப்டம்பர் 2026ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்!

இந்தியாவில் 2026 செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல்..

car

டாப் 10 கார்கள் - X

Published On :

இந்தியாவில் 2026 செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் வெளியிகியுள்ளன.

மாருதி சுஸுகி பலேனோ - செப்டம்பர் 2026-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான காராக இது திகழ்கிறது. கடந்த ஆண்டை விட இதன் விற்பனை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. மொத்தம் 25,391 கார்கள் விற்பனையான நிலையில், பிரீமியம் ஹேட்ச்பேக் 12,219 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.

டாடா நெக்ஸான் – 20,456 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. செப்டம்பர் 2025-ல் இருந்த 22,573 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 9% சரிவு. இருப்பினும் டாடா நெக்ஸான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 20,000-க்கும் மேற்பட்ட யூனிட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், டாடா மோட்டார்ஸின் விற்பனை எண்ணிக்கையில் இது தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

டாடா பஞ்ச் – இது மொத்தம் 20,333 யூனிட்களை விற்பனையாகியுள்து. இது நெக்ஸானை விட வெறும் 123 யூனிட்கள் மட்டுமே குறைவு. என்ட்ரி-லெவல் எஸ்யூவி பிரிவில் இது 28% வருடாந்திர வளர்ச்சியை எட்டியுள்ளது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் – கடந்த ஆண்டு 13,767 யூனிட்களாக இருந்த ஃப்ரான்க்ஸ் விற்பனை, தற்போது 19,282 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 40% வளர்ச்சியைக் குறிப்பதோடு, மாருதி சுஸுகியின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக மாறியுள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் - 18,835 யூனிட்கள் விற்பனையாகி, 22% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மாருதி சுஸுகி டிசையர் - 17,754 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டை விட 11% குறைவு. முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே செடான் ரக கார் இதுவேயாகும்.

ஹூண்டாய் கிரெட்டா - செப்டம்பர் மாதத்தில் 17,657 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையான 18,861 யூனிட்களை விட 6% குறைவு. இருப்பினும், நாட்டின் முதல் 10 பயணிகள் வாகனங்களில் ஒன்றாக இது தொடர்கிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் - 17,399 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இது செப்டம்பர் 2025-ஐ விட 12% அதிகமாகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ - 17,313 யூனிட்கள் விற்பனை செய்துள்ளன. கடந்தாண்டு செப்டம்பரில் 18,372 யூனிட்கள் விற்பனையான நிலையில் 6 % குறைவு.

மாருதி சுசுகி எர்டிகா - 16,911 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான வலுவான தேவையைப் பிரதிபலிக்கிறது.

Top 10 best-selling cars in September 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.