25% வளர்ச்சியுடன் புதிய உச்சம் தொட்ட மாருதி சுசுகி விற்பனை!
மாருதி சுசுகி, அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி - கோப்புப் படம்
புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதிக விற்பனை இருந்தபோதிலும், இந்த ஆண்டு மொத்த வாகன விநியோகம் 25 சதவீதம் அதிகரித்து 2.76 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் வாகன விநியோகம் 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து 2.12 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சூப்பர் கேரி விற்பனையை உள்ளடக்கிய மொத்த உள்நாட்டு விநியோகம் சுமார் 19 சதவீதம் அதிகரித்து 2.26 லட்சம் வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது.
சமீபத்தில், மாருதி சுசுகி தனது கையிருப்பு குறைவாக இருப்பதாகவும், டீலர்ஷிப்களில் சுமார் 15-16 நாட்களுக்குத் தேவையான வாகனங்கள் இருப்பதாகவும், சுமார் 2 லட்சம் வாகனங்களுக்கான முன்பதிவுகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தது.
ஆல்டோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், எஸ்-பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட பயணிகள் கார்களின் விற்பனை, கடந்த ஆண்டை விட 18.4 சதவீதம் அதிகரித்து 1 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்எல் 6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 26 சதவீதம் அதிகரித்து 97,787 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
மற்ற வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாருதி சுசுகி மேற்கொண்ட விற்பனை, கடந்த ஆண்டு 8,915 வாகனங்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது 9,459 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் விற்பனை, கடந்த ஆண்டு 4,357 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 4,405 வாகனங்களாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஈக்கோ வேன்களின் விற்பனையும் கடந்த ஆண்டு 13,537 ஆக இருந்ததை விட அதிகரித்து, இந்த ஆண்டு 13,720 வாகனங்களாகப் பதிவாகியுள்ளது.
ஏற்றுமதி 59 சதவீதம் அதிகரித்து 49,872 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
Summary
Maruti Suzuki posted its highest-ever monthly sales in October with 25 per cent year-on-year growth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


