ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இந்தியாவில் மின்சார வாகன விற்பனை புதிய உச்சம்!

இந்தியாவில் மின்சார வாகன விற்பனை செப்டம்பர் மாதம் 3.33 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது.

மின்சார வாகனங்கள்

Published On :

மும்பை: இந்தியாவில் மின்சார வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவாக 2026 செப்டம்பர் மாதம் 3.33 லட்சம் வாகனங்கள் விற்பனையானதாக 'ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18,559 ஆக இருந்த மின்சாரப் பயணிகள் வாகனங்களின் விற்பனை, இந்த ஆண்டு செப்டம்பரில் கிட்டத்தட்ட இருமடங்காகி 36,108 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீதம் அதிகரித்து 3,33,364 வாகனங்களாக இருப்பதாக, 'ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்தது.

பண்டிகைக் காலத் தேவை, குறைவான இயக்கச் செலவு, பல்வேறு வகையான வாகன மாடல்கள் மற்றும் 'பிரதமர் இ-டிரைவ்' திட்டம் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் ஆதரவு ஆகியவை இணைந்து, மின்சார வாகனங்கள் ஒரு மாற்றுத் தேர்வாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பரிசீலிக்கும் ஒரு முக்கிய தேர்வாக மாறி வருவதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை 3,33,364 ஆக பதிவானது. இந்தியாவில் ஒரு மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச மின்சார வாகன விற்பனை இதுவேயாகும். இது ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீத வளர்ச்சியைக் குறிப்பதோடு, மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பை ஓராண்டுக்கு முன்பு இருந்த 10 சதவீதத்திலிருந்து சுமார் 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 88 சதவீதம் அதிகரித்து 2,07,314 வாகனங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Summary

Electric passenger vehicle retail sales nearly doubled in September.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.