
தென் ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் எச்சிஎல்!
எச்சிஎல் அதன் புதிய தலைமையகத்தைத் திறப்பதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதாக அறிவித்தது.

hcl
புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்சிஎல் டெக், தென்னாப்பிரிக்காவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜோகன்னஸ்பர்க்கில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்பு மையத்துடன் கூடிய புதிய தலைமையகத்தைத் திறந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
சாண்டனில் அமைந்துள்ள இந்த புதிய மையம், தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் திறனை வலுப்படுத்தும்.
புதிதாக நிறுவப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தில், வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவு சேவை மற்றும் தீர்வுகளை ஆராய உதவும். இதில் செயற்கை நுண்ணறிவு-சார்ந்த சேவை, துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகள், செயற்கை நுண்ணறிவு - பொறியியல், செயற்கை நுண்ணறிவு - ஃபவுண்ட்ரி, செயற்கை நுண்ணறிவு - ஃபேக்டரி மற்றும் ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும்.
தொழில்நுட்பத் வல்லுநர்களை வளர்ப்பதற்கும், நாட்டின் டிஜிட்டல் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துவதற்கும் ஒரு பிரத்யேகப் பயிற்சி மையமாகவும் இந்த மையம் செயல்படும்.
Summary
HCLTech opening a new regional headquarters in Johannesburg.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






