
வட்டி விகிதம் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!
சென்செக்ஸ் 429.11 புள்ளிகள் சரிந்து 72,638.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 173.05 புள்ளிகள் சரிந்து 22,603.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
மும்பை: கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டிருந்த பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் நிறைவடைந்தன.
இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை சுமார் நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக உயர்த்தியதைத் தொடர்ந்து, குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 429 புள்ளிகளுடனும், நிஃப்டி 173 புள்ளிகளுடன் சரிந்து முடிவடைந்தன. எதிர்பார்த்தபடியே இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை அறிவித்ததால், உள்நாட்டில் பங்குச் சந்தை எதிர்வினையாற்றியது.
30 நிறுவனங்களைக் கொண்ட சென்செக்ஸ் 429.11 புள்ளிகள் சரிந்து 72,638.70 புள்ளிகளாக இருந்தது. இதில் 26 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும், 4 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் அதிகபட்சமாக 599.09 புள்ளிகள் வரை சரிந்து 72,468.72 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. 50 நிறுவனங்களைக் கொண்ட நிஃப்டி 173.05 புள்ளிகள் சரிந்து 22,603.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலையேற்றம் அதனை தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதும் பங்குச் சந்தை வெகுவாக பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் டைட்டன், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் கோட்டக் மஹிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை ஏற்றம் கண்டது.
ரிசர்வ் வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. சுமார் நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்வு இதுவாகும். பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவற்றால் கொள்கை மாற்றத்தின் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் வட்டி விகித உயர்வுகள் இருக்கலாம் என்பதையும் இது சுட்டி காட்டியது.
இந்த நடவடிக்கை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை நோக்கி பயணித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இதன் மூலம், குறுகிய காலத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான இடம் இல்லை என்பது உறுதியானது.
குறுகிய காலத்தில் வட்டி விகிதக் குறைப்புகள் சாத்தியமில்லை என்றும், மாறிவரும் சூழல்கள் பொறுத்து, வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தம் மேற்கொள்ள மட்டுமே முடியும் என்றார் மல்ஹோத்ரா.
பங்குச் சந்தைத் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாக்கிழமை) ரூ. 2,961.30 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கே 225 குறியீடு மற்றும் ஹேங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. நேற்று (செவ்வாக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.
சர்வதேச அளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.41 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 102 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock markets closed lower on Wednesday as the RBI raised the key policy rate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







