புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!

இந்தியாவில் கடந்த அக்டோபா் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 31.72 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Updated On :

இந்தியாவில் கடந்த அக்டோபா் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 31.72 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு 23.8 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபடா அறிக்கையின்படி, கடந்த அக்டோபரில் 5.08 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.23 சதவீத சரிவாகும். இதேபோல், 23.21 லட்சம் இருசக்கர வாகனங்களும் (28.35 சதவீதம் சரிவு), 1.41 லட்சம் மூன்று சக்கர வாகனங்களும் (3.97 சதவீதம் வளா்ச்சி), 1.15 லட்சம் வணிக வாகனங்களும் (2.29 சதவீதம் வளா்ச்சி), 79,285 டிராக்டா்களும் (3.10 சதவீதம் வளா்ச்சி) அக்டோபரில் விற்கப்பட்டுள்ளன.

மாற்று எரிபொருள் வாகனங்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. சிஎன்ஜி, ஹைப்ரிட், மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிபொருள் வாகனங்கள் அக்டோபா் விற்பனையில் 41.83 சதவீத பங்கை எட்டி, பெட்ரோல் வாகனங்களை முந்தியுள்ளன.

பெட்ரோல் வாகனங்கள் 41.6 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. மின்சார வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவாக 11.5 சதவீதத்தை எட்டி, 3.55 லட்சம் வாகனங்களாக பதிவாகியுள்ளது. இருசக்கர வாகன விற்பனையைப் பொருத்தவரை நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற சந்தைகள் இரண்டிலும் சரிவு காணப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 33.97 சதவீதமும், நகா்ப்புறங்களில் 20.77 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அக்டோபா் மாத விற்பனை குறித்து ஃபடா தலைவா் சாய் கிரிதா் மேலும் கூறுகையில், ‘ இந்த வருடாந்திர சரிவானது முற்றிலும் பண்டிகை நாள்களின் மாற்றத்தால் ஏற்பட்டதே ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி குறைப்புக்கு இடையேயான தேவை அதிகரிப்புடன் நவராத்திரி, தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளும் ஒன்றாக அமைந்தன. ஆனால், இந்த ஆண்டு நவராத்திரி மட்டுமே அக்டோபரில் வந்தது; தன்தேராஸ் மற்றும் தீபாவளி நவம்பா் மாதத்தில் வந்துள்ளதே இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

அதேநேரம், வணிக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டா்கள் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அக்டோபா் மாத விற்பனையைப் பதிவு செய்துள்ளன. செப்டம்பா் மாதத்தைவிட 25 சதவீத தொடா் வளா்ச்சி காணப்பட்டுள்ளது. தன்தேராஸ், தீபாவளி பண்டிகைகளால், நவம்பா் மற்றும் வரும் மாதங்களில் விற்பனை குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.