மாருதி சுசுகி Q2 லாபம் 26.36% சரிவு! வருவாய் உயர்வு!!
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், அதன் 2வது காலாண்டில், ஏற்பட்ட அதிகரித்த செலவுகள் காரணமாக, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 26.36 சதவீதம் சரிந்து ரூ. 2,466.1 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

மாருதி சுசூகி - கோப்புப் படம்
மும்பை: கார் சந்தையில், முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், அதன் 2வது காலாண்டில், மேற்கு ஆசிய மோதலின் விளைவாக ஏற்பட்ட அதிகரித்த செலவுகள் காரணமாக, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 26.36 சதவீதம் சரிந்து ரூ. 2,466.1 கோடியாக இருந்தது. அதே சமயம், அதன் சாதனை அளவிலான காலாண்டு வாகன விற்பனையால் அதன் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 3,349 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. நிதியாண்டின் 2வது காலாண்டில், அதன் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ. 53,355.5 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 42,344.2 கோடியாக இருந்ததாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.
நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவு கணிசமாக அதிகரித்து ரூ. 50,619 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 39,018.4 ஆக இருந்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில், மூலப்பொருட்களின் செலவு ரூ. 37,488.5 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இது 25,324.2 கோடியாக இருந்தது.
மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக, மூல பொருட்களின் விலை உயர்வால், இந்த காலாண்டின் செயல்பாட்டு லாபம் ரூ. 2,803.7 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலாண்டில் இது ரூ. 3,382 கோடியாக இருந்தது.
உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில், மாருதி சுசுகியின் வளர்ச்சி பரவலாக இருந்தது. அதில் சிறிய கார்களின் விற்பனை 35.9 சதவிகிதமும், எஸ்யூவி கார்களின் விற்பனை 68.2 சதவிகிதமும் அதிகரித்தது.
உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்ட போதிலும், விநியோகத்தை விடத் தேவை தொடர்ந்து அதிகமாகவே இருந்தது. இதன் விளைவாக, காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பில் இருந்த சரக்கு இருப்பு சுமார் 17 நாட்களுக்குத் தேவையான அளவாக மட்டுமே இருந்ததாகவும், சுமார் 2,00,000 வாகனங்களுக்கான முன்பதிவுகள் நிலுவையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
ஏற்றுமதி சந்தையில், சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,10,487 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், நிதியாண்டின் 2வது காலாண்டில் இது 1,08,119 வாகனங்களாக இருந்தது.
Summary
Car market leader Maruti Suzuki India Ltd reported a 26.36 per cent decline in its consolidated net profit for the second quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


