வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு காவல் துறை 20 நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23 நடைபெற உள்ளது.
சேலத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் துறையின் அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலர் வேல்முருகன் தலைமையில் தவெக நிர்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.
அதேசமயம், அகரம்சேரியில் 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தை தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கங்கள் கேட்டும் காவல் துறை சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. தவெகவினர் அளிக்கும் விளக்கங்கள் அடிப்படையில் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு தொடர்பான 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை தவெக நிர்வாகிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். யு. சிவராமன் வழங்கினார்.
தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து சாலை வழித்தடத்தில் வேலூருக்கு வரவுள்ள நிலையில், இளைஞர்கள் யாரும் அவரை வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும், கூட்டத்துக்கு வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Summary
The police have imposed 20 conditions on Thaweka leader Vijay's public meeting in Agaramsery, Vellore district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









