விருதுநகா் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஆக. 6 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாா்டன் நகா், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூா் சந்தை, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.