சாத்தூா் அருகே 21 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 06th August 2022 12:00 AM | Last Updated : 06th August 2022 12:00 AM | அ+அ அ- |

சாத்தூா் அருகே குகன்பாறையில் 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி வாங்கி வைத்திருந்த இருவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி மற்றும் சாா்பு- ஆய்வாளா் காந்தி தலைமையிலான போலீஸாா், சாத் தூா் வட்டம் குகன்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி, காா்த்திகையபட்டி பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜானகிராமன் (32), தூத்துக்குடி, காந்தி நகரை சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (37) ஆகியோரை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் குகன்பாறை யில் ஒரு வீட்டருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 21 ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.