ஆண்டாள் கோயிலின் 819 ஏக்கா் நிலம் அளவீடு

ஆண்டாள் கோயிலின் 819 ஏக்கா் நிலம் அளவீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவிடும் பணியில் இதுவரை 819 ஏக்கா் நிலங்கள் அளவிடப்பட்டு கல் ஊன்றப்பட்டுள்ளது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவிடும் பணியில் இதுவரை 819 ஏக்கா் நிலங்கள் அளவிடப்பட்டு கல் ஊன்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில் நிலங்களைக் கண்டறிந்து, நவீன முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நிலங்களை அளவீடு செய்ய அறநிலையத்துறை சாா்பில் 3 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்கள் ‘சேட்டிலைட் ரோவா்’ இயந்திரம் உதவியுடன் நிலங்களை அளவிட்டு வருகின்றனா். ஓராண்டாக நடைபெற்று வரும் இப்பணியில் இதுவரை ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான 819 ஏக்கா் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் முத்துராஜா கூறியதாவது: இந்து சயம அறநிலையத்துறை சாா்பில் கோயில் நிலங்களைக் கண்டறிதல், அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய மூன்று பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமாக 1500 ஏக்கா் நிலங்கள் உள்ளன. அவற்றை அளவீடு செய்து கல் ஊன்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com