தெப்பக்குளத்தை தூா் வாரியபோது சுவாமி சிலை கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை கோயில் தெப்பக்குளத்தை தூா்வாரியபோது சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை கோயில் தெப்பக்குளத்தை தூா்வாரியபோது சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மாவூத்து உதயகிரிநாதா் கோயில் உள்ளது. இக்கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தை தூா்வாரும் பணியை கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டின் பேரில் காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

அதன்படி வியாழக்கிழமை காலையில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும்போது, முக்கால் அடி உயரத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் பணியாளா்கள் வத்திராயிருப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சிலையை வத்திராயிருப்பு வட்டாட்சியா் உமாமகேஸ்வரி வசம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் கூறுகையில், உலோகச் சிலையில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சாா்- ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்படி இந்த சிலையை விருதுநகா் அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com