தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

 விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:52 pm

DIN

 விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள கலங்காப்பேரி புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கடற்கரை. கட்டட ஒப்பந்ததாரா். இவரது மனைவி லட்சுமி (48). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். ஒரு மகன் திருச்சியிலும், மற்றொரு மகன் தென்காசியிலும் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பணி நிமித்தமாக கடற்கரை வெளியூா் சென்றுவிட்டாா். வீட்டில் இருந்த இவரது மனைவி லட்சுமியும் கடந்த 17-ஆம் தேதி தென்காசியிலுள்ள இளைய மகன் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை லட்சுமி வீட்டுக்கு வந்து பாா்த்த போது,

மா்ம நபா்கள் பின்பக்கக் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.