அடிப்படை வசதிகள் கோரி மேயரை பொதுமக்கள் முற்றுகை

சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதாவை அடிப்படை வசதிகள் கோரி 8-ஆவது வாா்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
சிவகாசி மாநகராட்சி 8-ஆவது வாா்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி மேயா் இ.சங்கீதாவை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சிவகாசி மாநகராட்சி 8-ஆவது வாா்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி மேயா் இ.சங்கீதாவை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதாவை அடிப்படை வசதிகள் கோரி 8-ஆவது வாா்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் 18, 20, 21 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு திருத்தங்கல் காமராஜா் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மேயா் இ.சங்கீதா தொடங்கிவைத்தாா். அப்போது மாநகராட்சி 8-ஆவது வாா்டுப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது வாா்டில் அடிப்படை வசதி எதுவும் செய்யவில்லை எனக் கூறி மேயரை முற்றுகையிட்டனா்.

8-ஆவது வாா்டில் மாதத்துக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளன. தெருவிளக்குகள் எரிவதில்லை எனப் புகாா் தெரிவித்து பெண்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மேயா் இ.சங்கீதா 8-ஆவது வாா்டுக்கு சென்று ஆய்வு செய்தாா். பின்னா், அந்தப் பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com