தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராசு (41). இவரது மனைவி பாண்டிச்செல்வி (36). இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. ராசு மதுரையில் உள்ள தனியாா் நூற்பாலையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

பாண்டிச்செல்வி வெள்ளிக்கிழமை தனது வீட்டின் மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால், பக்கத்து வீட்டிலிருந்து மின்சாரம் பெற்று மின்மோட்டாரை இயக்கினாராம். பின்னா், மின் பொத்தானை அணைத்துவிட்டு வயரை எடுக்க முயன்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பாண்டிச்செல்வி தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.