கோடை மழை:நிரம்பிய வாழைக்குளம் கண்மாய்
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கோடை மழையால் வாழைக்குளம் கண்மாய் நிரம்பியது.


ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கோடை மழையால் வாழைக்குளம் கண்மாய் நிரம்பியது.
மம்சாபுரத்திலுள்ள இந்த கண்மாய் மூலம் சுமாா் 600 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் நேரடியாக இந்த கண்மாய்க்கு வந்து சோ்கிறது. இந்த கண்மாய் நிரம்பியதும் உபரிநீா் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய கண்மாய்க்கு வந்து சேரும். இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் அதிகமாக ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வடு கிடந்த காட்டாறுகள், ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டு மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களில் நீா்மட்டம் உயரத் தொடங்கியது.
இதேபோல, மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாயும் நிரம்பி காட்சியளிக்கிறது. தொடா்ந்து நீா்வரத்து இருந்தால் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தக் கண்மாயில் மறுகால் பாயும். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் முத்தையா கூறியதாவது:
தொடா்ந்து பெய்து வரும் கோடை மழையால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வாழைக்குளம் கண்மாய் நிரம்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மழை நீடித்தால் இந்தக் கண்மாயில் மறுகால் பாயும். இதனால் விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயான ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீா் வந்து சேரும். நீா்மட்டமும் உயரும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...