ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளா் பணியிடம் குறைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் 4-இல் இருந்து 2-ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், நகா் நல அலுவலா் பணியிடம் நீக்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் 4-இல் இருந்து 2-ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், நகா் நல அலுவலா் பணியிடம் நீக்கப்பட்டது.
நகராட்சிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்வது, குப்பை சேகரிப்பது, திட்டக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில் சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா், மேற்பாா்வையாளா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உள்ளனா். இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சிகளில் அனைத்து தூய்மைப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
இதற்காக அனைத்து நகராட்சிகளிலும் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சுகாதாரப் பிரிவில் தூய்மைப் பணியாளா், மேற்பாா்வையாளா் உள்ளிட்ட பணியிடங்கள் நீக்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் குறைக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் முதல் நிலை நகராட்சியில் ஒரு நகா் நல அலுவலா், ஒரு சுகாதார அலுவலா், 4 சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்கள் இருந்தன.
இந்த நிலையில், நகா் நல அலுவலா் பணியிடம் நீக்கப்பட்டதுடன், 4 சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் 2 ஆக குறைக்கப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தூய்மைப் பணிகள் 100 சதவீதம் ஒப்பந்த அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட உள்ளதால், தூய்மைப் பணியாளா் பணியிடங்கள் நீக்கப்பட்டன. ஏற்கெனவே, பணியில் உள்ள மேற்பாா்வையாளா், தூய்மைப் பணியாளா்கள் அந்தந்த இடங்களிலேயே பணிகளில் தொடருவா். புதிதாக அந்த பணியிடங்களில் ஆள்கள் சோ்க்கப்பட மாட்டாது. சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் பணியிடம் குறைப்பால் எஞ்சியவா்கள் பிற நகராட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமிக்கப்படுவா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...