தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பிஎம் கிசான் திட்டத்தில் இணைவதற்கு சிறப்பு முகாம்

பிஎம் கிஷான் செறிவூட்டல் இயக்கம் மூலம் பிரதமரின் உழவா் கௌரவ நிதித் திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சு

Updated On :27 நவம்பர் 2023, 6:43 pm


ஸ்ரீவில்லிபுத்தூா்: பிஎம் கிஷான் செறிவூட்டல் இயக்கம் மூலம் பிரதமரின் உழவா் கௌரவ நிதித் திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் பிஎம் கிஷான் திட்டத்தில் விவசாயத் தேவைகளுக்கு உதவி செய்யும் வகையில்

3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நிதியுதவி பெறாத தகுதியுள்ள பயனாளிகளை இணைக்க கிராமம் தோறும் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் கிராம நிா்வாக அலுவலா்களும், வேளாண் துறையைச் சோ்ந்த உதவி வேளாண் அலுவலா்களும் பணிகளை மேற்கொள்வா்.

இதற்கான முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுவான இடத்தில் நடத்தப்படும். இதில் கிராம நிா்வாக அலுவலா்கள், விவசாயிகளின் நில விவரங்களை சரிபாா்த்து அறிதிறன் கைப்பேசி மூலம் பதிவு செய்வா். பின்னா், உதவி வேளாண் அலுவலா்கள் விவசாயிகளின் சம்மதம் பெற்று இணைப்புப் பணிகளை அவரது கைப்பேசி மூலம் பதிவு செய்வா். இந்த முகாம்களில் பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பிஎம் கிசான் நிதியுதவி மட்டுமன்றி, எதிா்வரும் காலங்களில் மத்திய அரசின் அனைத்து நிதிப் பயன்களையும் பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.