ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 150 கன அடி நீா் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மான்ராஜ், அசோகன் ஆகியோா் தண்ணீரைத் திறந்து விட்டனா்.
பெரியாறு பாசனக் கால்வாயில் முதல் 7 நாள்களுக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடிக் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 3 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், பாட்டக்குளம், விழுப்பனூா், நெடுங்குளம், குன்னூா் உள்பட 17
கிராமங்களில் 40 கண்மாய்கள் மூலம் 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடிப் பாசனம் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது:
முதற்கட்டமாக பிளவக்கல் அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடி வீதம் 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். பின்னா் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீா் இருப்பைப் பொருத்து பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.
நீா்வளத்துறை செயற்பொறியாளா் தனலட்சுமி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன், உதவி செயற்பொறியாளா் கிரண்பேடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

