ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் பலி

பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் பலி

Updated On :3 ஏப்ரல் 2024, 12:07 am

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் ஐசிஏ நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (57). இவா் திங்கள்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

கிருஷ்ணன்கோவில் அருகே வலையபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, இவரது இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(33) மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.