ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எழுத்தா் குத்திக் கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எழுத்தா் குத்திக் கொலை

Updated On :3 ஏப்ரல் 2024, 12:07 am

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தனியாா் நிறுவன எழுத்தரை மா்ம நபா் கத்தியால் குத்திக் கொலை செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (42). இவரது மனைவி தெய்வானை. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவா் தனது வீட்டிலிருந்து கைகாட்டி கோயில் கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் மா்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அவா் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.