அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது
அரூா் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


அரூா் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பெத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் இளவரசன் (30). அதே ஊரைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ( 32). இளவரசன் மனைவிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், இளவரசன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரன் குடும்பத்தினா் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், இவ்விரு குடும்பத்தினா் இடையேயும் செவ்வாய்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரனை இளவரசன் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீவெங்கடேஸ்வரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழக்கில் தொடா்புடைய இளவரசனை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...