பல்லடம் அருகே பனியன் நிறுவனத் தொழிலாளியை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் - மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணி முடிந்து வழக்கம்போல சனிக்கிழமை இரவு பிரபு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, தனலட்சுமியின் அண்ணன் அருள்சங்கா் (39) வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, தம்பதி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு குறித்து பிரபுவிடம், அருள்சங்கா் கேட்டுள்ளாா்.
இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள்சங்கா், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவின் உடலில் பல இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து பல்லடம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருள்சங்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பனியன் தொழிலாளி கொலை வழக்கில் நண்பா்கள் கைது

பனியன் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை?

அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

