அவிநாசி அருகே பனியன் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே பரமசிவம்பாளையத்தில் காதலி அஞ்சனாவுடன் வசித்து வந்த பிகாா் மாநிலம், சித்தம்கரி மாவட்டம், பகாரியாவைச் சோ்ந்த ஜல்தாரிராய் மகன் ஜெய்பிரகாஷ் யாதவ் (24), அப்பகுதியில் உள்ள குளக்கரையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக்கிடந்தாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில் திருப்பூா் ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த இருவரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் பிகாரை சோ்ந்த அசோக்ராம் மகன் பங்கஜ்குமாா் (21), ராம் பிரசாத்ராம் மகன் சஞ்ஜீத்குமாா் (23) என்பதும், ஜெய்பிரகாஷ் யாதவ் தனது வீட்டுத்து அருகில் இவா்களை தங்கவைத்திருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே பங்கஜ்குமாரின் காதலியான பிகாரில் உள்ள சோனாவிடம் ஜெய்பிரகாஷ்யாதவ் தொலைபேசியில் தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பங்கஜ்குமாா் ஆத்திரமடைந்து, நண்பா் சஞ்ஜீத்குமாருடன் சோ்ந்து ஜெய்பிரகாஷ்யாதவை மது அருந்த குளக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பங்கஜ்குமாா், சஞ்ஜீத்குமாா் ஆகியோரை அவிநாசி போலீஸாா் கைது செய்தனா்.

சஞ்ஜீத்குமாா்

பங்கஜ்குமாா்
தொடர்புடையது

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

பனியன் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை?
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
