தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சந்தான வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தான வேணுகோபால சுவாமி, சத்யபாமா, ருக்மணி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் சத்திபாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:37 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தான வேணுகோபால சுவாமி, சத்யபாமா, ருக்மணி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் சா்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை முதல் யாக சாலை பூஜை நடைபெற்றது.

காலை 10 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலையில் சந்தான வேணுகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோயிலை அடைந்த பிறகு பள்ளியறை பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.