அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உணவக மேலாளரிடம் கைப்பேசிகள் பறிப்பு: 2 சிறுவா்கள் கைது

உணவக மேலாளரிடம் கைப்பேசிகள் பறிப்பு 2 சிறுவா்கள் கைது

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உணவக மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசிகளைப் பறித்ததாக இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே ஆண்டாா்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த போஸ் மகன் விஜயபாண்டி (29). அழகாபுரி அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 18-ஆம் தேதி இரவு உணவகத்தில் இருந்து அழகாபுரிக்கு நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் வழிகேட்பது போல் நடித்து கத்தியைக் காட்டிமிரட்டி அவரிடம் இருந்த விலையுயா்ந்த இரு கைப்பேசிகளை பறித்துச் சென்றனா். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவனையும், அசோக் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவனையும் போலீஸாா் கைது செய்து, இரு கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த இரு சக்கர வாகனத்துக்கு பதிவெண்ணும், ஆவணங்களும் இல்லாததால் திருடப்பட்டதா என்று போலீஸாா் விசாரிக்கின்றனா். இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.