கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நவ. 27-இல் சாட்சிகள் விசாரணை
பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வருகிற 27-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்க உள்ளது.


பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வருகிற 27-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்க உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் முன்னாள் அதிமுக நிா்வாகியும், பரமக்குடி நகா்மன்ற உறுப்பினருமான சிகாமணி,
மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜா முகமது, இடைத் தரகா்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேரை போலீஸாா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்தனா். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை 5 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினா். வழக்கு விசாரணையை நவம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுதாகா் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் வருகிற 27-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்க உள்ளது. அன்று மொத்தமுள்ள 45 சாட்சிகளில் 5 சாட்சிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...