ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ராஜபாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

ராஜபாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகா் எதிரே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு எச்சரிக்கை மணி ஒலித்தது. அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்த போது அடையாளம் தெரியாத நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ராஜபாளையம் போலீஸாா் சோதனை செய்த போது, ஏடிஎம் இயந்திரத்தை மா்ம நபா்கள் உடைக்க முயன்றது தெரியவந்தது. தப்பியோடிய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த மையத்தில் ஏற்கெனவே இரு முறை கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com