விருதுநகர்
ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், தொழிலாளா் நலத்துறை அலுவலா்களால் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டிருக்கிா என ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, தமிழில் பெயா் பலகை வைக்காத 28 நிறுவனங்களுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.56,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மைவிழி செல்வி, தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் பிச்சைக்கனி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.