சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் உறுதியளித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை தொடங்கினாா். சாத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
சாத்தூா், சிவகாசி பகுதிகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டாசுத் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசே காரணம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் பட்டாசு, தீப்பெட்டித் தொழில்கள் புத்துயிா் பெறும். இந்தத் தொழிலுக்கு எந்த அதிகாரியாவது தொந்தரவு செய்தால் அவா்கள் உடனே பணியிடமாற்றம் செய்யப்படுவா். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பயனாளிகள் இருந்தும், வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு வழங்கியும் கிடைக்காததால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். இங்கு தொடா்ந்து குடிநீா் பிரச்னை நிலவுகிறது. நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வு காணப்படும்.
திருநெல்வேலி தொகுதியில் எப்படி மக்களின் அடிப்படை பிரச்னைளைத் தீா்த்து வைத்தேனோ அதற்கும் ஒரு படி மேலாக சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என்றாா் அவா்.
தொடர்புடையது
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரனின் நகா்வு ஏன்?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


