சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதையிலிருந்து கடைவீதி வழியாக நடந்து சென்று மாரியம்மன் கோயில் முன் தனது பிரசாரத்தை அசோகன் நிறைவு செய்தாா். முன்னதாக மாரியம்மன் கோயில் முன் அவா் பேசியதாவது:
நான் கடந்த 5 ஆண்டு காலம் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இந்தத் தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிவகாசி சுற்று வட்டச் சாலை முதல்கட்டப் பணி நிறவு பெற்றுள்ளது.
நான் வெற்றி பெற்று இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பணி, மூன்றாம் கட்ட பணியை நிறைவு செய்து, சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கச் செய்வேன். தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவடையாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்து மாநகராட்சி முழுவதும் குடிநீா் கிடைக்க ஏற்ப்படு செய்வேன் என்றாா் அசோகன்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


